நன்றி: மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நன்றி: தமிழ் நாடு வேளான் பல்கலைக்கழகம்
© Tamil Nadu Agricultural University All Rights Reserved 2014


காளான் வளர்ப்பின் முக்கியத்துவம்
நம் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 3000 மில்லியன் டன் பண்ணைக் கழிவுகள் கிடைக்கின்றது. இதில் ஒரளவு மட்டுமே கால் நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான பண்ணைக்கழிவுகள் எரிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 25 விழுக்காடு பண்ணைக் கழிவுகளை காளான் சாகுபடிக்கு உபயோகப்படுத்தினால் 400 மில்லியன் டன் காளான் உற்பத்தி செய்ய இயலும். தற்போது 13,000 மெட்ரிக் டன் காளான்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நமது தமிழ்நாட்டில் கிடைக்கும் 30 கோடி டன் பண்ணைக் கழிவுகளில் சுமார் 10 விழுக்காடு கழிவுகளை காளான் உற்பத்திக்கு பயன்படுத்தினால் 3.4 லட்சம் டன் காளான் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்ய முடியும்.
காளான் சாகுபடியில் உள்ள நன்மைகள் காளான் வளர்ப்பிற்கு சிறிய இடம் போதுமானது.

பண்ணையில் கிடைக்கும் சோளம் மற்றும் வைக்கோல் ஆகியவைகளை முறையே காளான் விதை மற்றும் காளான் உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.

காளான் எடுத்த பின்பு உள்ள எஞ்சிய பொருட்களை இயற்கை உரமாக மாற்றி உபயோகிக்கலாம்.

கிராம மகளிர் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் காளான் வளர்ப்பை சுய தொழிலாக தொடங்கலாம்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு காளான் வளர்ப்பு உறுதுணையாக இருக்கும்.

புரதம் மற்றும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட காளான்களை உட்கொள்ளுவதால் ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்கலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வித்து பரவும் அறையை இருட்டாக வைத்திருக்க வேண்டும். 
இதனால் வித்துக்கள் வேகமாக வளரும்.
எலி கொல்லியை குறிப்பிட்ட கால இடைவெளியில் வைக்க வேண்டும்
நீரை மணல் அடுக்கின் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் தெளிக்க வேண்டும்
காளான் படுக்கைகளின் மீது பூச்சிக் கொல்லிகளை தெளிக்கக் கூடாது


குறிப்பு:
அதிக காளான் விளைச்சலை பெருவதற்க்கு 
தானியங்கி வெப்பனிலை கருவியை பொருத்தவும். 
மேலும் தகவல் பெறுவதற்கு 
9360377479 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளவும்.


காளான் வளர்ப்பு செயற்கை நுண்ணறிவு ஐ.ஒ.டி கருவி

இந்த பயிற்சி வீடியோ இரண்டு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது, 

கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி வீடியோவை காணலாம்.


வீடியோ பகுதி _1

வீடியோ பகுதி _2